Feb 20, 2026 - 09:31 AM -
0
ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனம் நாட்டின் இளம் சாதனையாளர்களுக்கான முதலீடான தனது புலமைப்பரிசில் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டு பதிப்பிற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன் கோருகிறது.
செலிங்கோ லைஃப் நிறுவனமானது, தனது காப்புறுதிதாரர்களின் பிள்ளைகறடைய திறமையை அடையாளம் கண்டு பாராட்டி ஊக்குவிப்பதற்கான நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், தனது பிரணாம புலமைப்பரிசில் திட்டத்தின் தொடர்ச்சியான 25வது பதிப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
ஆயுள் காப்புறுதித்துறையில் சந்தையின் முன்னணி நிறுவனமாக திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது, 2026 ஆம் ஆண்டுக்கான பிரணாம புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ. 22.7 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் தொகைகளை வழங்கவுள்ளது. இதன் மூலம் காலாண்டாக இடையறாது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஊக்குவிப்பு பாராட்டு முயற்சியானது தொடர்ந்து வலுப்படுத்தப்படுகிறது. செலிங்கோ லைஃப்பின் பிரணாம புலமைப்பரிசில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் 3,466 மாணவர்களுக்கு பயன் அளித்துள்ளதுடன், இத்திட்டத்திற்கிணங்க கல்வித் திறமைகள் மற்றும் விளையாட்டு, கலை உள்ளிட்ட பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக, மொத்தமாக ரூ. 240 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2026 பிரணாம புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், கல்விசார் மைல்கற்களையும் தேசிய அளவிலான திறமை அடிப்படையிலான சாதனைகளையும் உள்ளடக்கிய நான்கு பிரிவுகளில், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்கள் புலமைப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, 2024 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 2024 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், மேலும் 2024–25 காலப்பகுதியில் விளையாட்டு, நாடகம், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் துறைகள் போன்றவற்றில் தேசிய அல்லது சர்வதேச அங்கீகாரம் பெற்ற மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பிரிவின் கீழ், 25 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். இதற்கிணங்க, செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்களின் பிள்ளைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவருக்கு தலா ரூ. 240,000 பெறுமதியான புலமைப்பரிசில் தொகை ஐந்து ஆண்டு காலப்பகுதியில் செலுத்தப்படும். மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக சாதனை புரிந்த மாணவர்களுக்கு தலா ரூ. 168,000 மதிப்பிலான, தொகை இரண்டு ஆண்டுகள் காலப்பகுதியில் செலுத்தப்படும் வகையில் 25 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டு, மொத்தம் 100 மாணவர்கள் பாராட்டப்படுவர். ஒவ்வொரு பாடத்துறையிலும் Z-ஸ்கோர் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும், இதற்கிணங்க தலா ரூ. 120,000 ஒரே தடவையில் வழங்கப்படும். மேலதிகமாக, விளையாட்டு, நாடகம், புத்தாக்கம் அல்லது படைப்பாற்றல் துறைகளில் தேசிய அல்லது சர்வதேச அளவில் சிறந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு, தலா ரூ. 50,000 என்ற ரீதியில் 10 தேசிய திறமை பரிசில்களும் வழங்கப்படும். 2026 பிரணாம புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன, தகுதியுடைய காப்புறுதிதாரர்கள் தமது பிள்ளைகளுக்காக 2026 ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்படுகிறார்கள். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 2026 அக்டோபரில் நடைபெறவுள்ளது.
செலிங்கோ லைஃப் நிறுவனமானது பிரணாம புலமைப்பரிசில் மூலம், தொடர்ந்து கல்விச் செலவுகளின் நிதிசார் சுமையை குறைக்க உதவுவதுடன், இளம் இலங்கை மாணவர்கள் கல்வியில் தமது முழு திறமையை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கிறது. இது, நிதி பாதுகாப்பின் வாக்குறுதியைத் தாண்டி குடும்பங்களை ஆதரிப்பது என்ற நிறுவனத்தின் நீண்டகால தத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர (“People’s Life Insurance Service Provider of the Year”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

