Header Logo

வணிகம்
ஓய்வூதியதாரர்களுக்கு கைரேகை அடிப்படையிலான ஆயுள் சான்றிதழ் சரிபார்ப்பை DFCC வங்கி அறிமுகப்படுத்துகிறது

Feb 20, 2026 - 09:35 AM -

0

ஓய்வூதியதாரர்களுக்கு கைரேகை அடிப்படையிலான ஆயுள் சான்றிதழ் சரிபார்ப்பை DFCC வங்கி அறிமுகப்படுத்துகிறது

கொழும்பு, சிரேஷ்ட பிரஜைகளுக்கான கருசரு (Garusaru) திட்டத்தின் கீழ், ஓய்வூதியத் திணைக்களத்துடன் இணைந்து, தகுதியான அரச ஓய்வூதியதாரர்கள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 DFCC வங்கிக் கிளைகளில் கைரேகை அங்கீகாரத்தைப் பயன்படுத்தி வருடாந்த ஆயுள் சான்றிதழ் சரிபார்ப்பை பூர்த்தி செய்ய இடமளிக்கும் இலகுபடுத்தப்பட்ட கைரேகை அடிப்படையிலான செயல்முறையை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 

2016 ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்ற மற்றும் ஏற்கனவே ஓய்வூதியத் திணைக்களத்தில் தமது கைரேகை அடையாளங்களைப் பதிவு செய்துள்ள அரச ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது. இது பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலர் காரியாலயங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தைப் போக்குகிறது. இதனால் ஓய்வூதியதாரர்கள் இந்த கட்டாயத் தேவையை நேரடியாக DFCC வங்கிக் கிளையில் பூர்த்தி செய்ய முடியும். 

கைவிரல் அடையாள சரிபார்ப்பு ஓய்வூதிய பதிவு நடைமுறைகள் சௌகரியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை மேற்கொள்வதற்கு உதவுகிறது. இது தேசிய ஓய்வூதிய கட்டமைப்பின் மத்தியில் கூடுதல் மட்டத்தில் நம்பகத்தன்மைக்கு பங்களிக்கிறது. 

இதற்குத் தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் இந்த சேவையை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த DFCC வங்கி கிளைகளுக்கும் வருகை தரலாம். கிளைகளின் அமைவிடங்கள் மற்றும் தேவையான தகைமைகள் பற்றிய விபரங்கள் www.dfcc.lk மூலமாகக் கிடைக்கின்றன. 

DFCC வங்கி குறித்த விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. 

நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title