Header Logo

சினிமா
நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு!

Feb 20, 2026 - 10:14 AM -

0

நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு!

மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025 ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார். 

இந்த நிலையில்,வைத்தியசாலை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மம்மூட்டி, உடல்நலக் குறைவான அந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்முறையாக பொதுவெளியில் பேசியுள்ளார். 

அவர் பேசுகையில், "கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. எனக்கு நீண்ட காலமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் இருந்தது. எதனையும் என்னால் நுகர முடியவில்லை. அதேபோல் உணவின் சுவையும் தெரியவில்லை. இப்போதுதான் அது மெதுவாக திரும்பி வருகிறது. ஒரு விஷயத்தை நாம் இழக்கும் போதுதான் அதனுடைய மதிப்பை உணர்கிறோம்" என கூறினார். 

சுமார் ஓராண்டு காலம் சிகிச்சைக்கு பின் நடிகர் மம்மூட்டி இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானாலும், அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title