Header Logo
Mogo Academy

விளையாட்டு
மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் நடுவர் உயிரிழப்பு!

Feb 20, 2026 - 11:44 AM -

0

மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் நடுவர் உயிரிழப்பு!
Mobitel inner

இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. 

கடந்த 18 ஆம் திகதிநடந்த போட்டியின்போது கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65), நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர். 

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார். 

மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara