செய்திகள்
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Feb 20, 2026 - 03:21 PM -

0

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05