Header Logo
Mogo Academy

விளையாட்டு
மேக்ஸ்வெல்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது

Feb 20, 2026 - 03:32 PM -

0

மேக்ஸ்வெல்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது
Mobitel inner

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் அணி தலைவர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, 

அவுஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கிண்ண பயணம் மோசமாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கம்மின்ஸ், ஹேசில் வுட் காயத்தால் விலகினர். முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட்டும் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் ஜிம்பாப்வேயுடன் தோற்றபோதே, உலகக் கிண்ண வாய்ப்பு முடிந்து விட்டதாக நினைத்திருப்பார்கள். 

முந்தைய ஐ.சி.சி. மற்றும் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணிகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய அவுஸ்திரேலிய அணியிடம் வெற்றி தொனிக்குரிய ஒளிவட்டம் தெரியவில்லை. இது போன்ற உலக கிண்ண போட்டியை ஜெயிக்க வேண்டும் என்றால். உங்களது சிறந்த வீரர்களும், அனுபவ வீரர்களும் ஒருங்கிணைந்து முக்கியமான தருணங்களில் கைகொடுக்க வேண்டும். அதை செய்யவில்லை. கேமரூன் கிரீன், டிம் டேவிட் போன்ற முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் போதுமான ஓட்டங்கள் எடுக்காததும் பின்னடைவுக்கு காரணமாகும். 

2028 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது போல் தோன்றுகிறது. அதே சமயம் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் நிச்சயம் அணியில் இருப்பார்கள். மார்கஸ் ஸ்டோனிசின் இடமும் கேள்விக்குறி தான். ஆனால் உலகம் முழுவதும் நடக்கும் 20 ஓவர் லீக்கில் மட்டும் விளையாடும் அவரது ஆல் - ரவுண்டர் திறமைக்காக அணியில் தொடரலாம் இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara