செய்திகள்
சோமாவதிய - சுங்காவில வீதி நீரில் மூழ்கியது

Feb 21, 2026 - 11:10 AM -

0

சோமாவதிய - சுங்காவில வீதி நீரில் மூழ்கியது

சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். 

இன்று காலை 9.15 மணி நிலவரத்தைக் கருத்திற்கொண்டு வெளியிடப்பட்ட உரிய அறிவிப்பின்படி, சுங்காவிலவில் இருந்து சோமாவதிய புனித பூமி வரையான வீதி சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளது. 

இதன் காரணமாக, குறித்த வீதி இலகுரக வாகனங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05