Header Logo
Mogo Academy

விளையாட்டு
இந்தியாவுடன் நாக் அவுட்டில் மோதும் வாய்ப்பு ஏற்பட்டால்...

Feb 21, 2026 - 03:41 PM -

0

இந்தியாவுடன் நாக் அவுட்டில் மோதும் வாய்ப்பு ஏற்பட்டால்...
Mobitel inner

டி20 உலகக் கிண்ண தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடந்து வருகிறது. 

பங்களாதேஷ் அணிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இழைக்கப்பட்ட அநீதிக்கு ஆதரவாக, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் முன்னர் அறிவித்திருந்தார். 

பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐசிசி மற்றும் பிற நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி 15 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம் இறுதி நேரத்தில் புறக்கணிப்பு முடிவு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் நாக் அவுட் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் அரசு முடிவையே கிரிக்கெட் வாரியம் பின்பற்றும் என கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது, 

அரசின் அறிவுறுத்தல்களையே வாரியம் பின்பற்றும். ஒருவேளை தொடரின் நாக்-அவுட் சுற்றில் மீண்டும் இந்தியாவுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அப்போதும் அரசின் முடிவே இறுதியானது என வாரியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara