Header Logo
Mogo Academy

விளையாட்டு
கண்மூடித்தனமாக விளையாட மாட்டேன்!

Feb 21, 2026 - 05:54 PM -

0

கண்மூடித்தனமாக விளையாட மாட்டேன்!
Mobitel inner

உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷிவம் துபே தனது ஆல்ரவுண்டர் திறமையால் முக்கிய பங்கு வகித்தார். 

இந்திய சகலத்துறை ஆட்டக்காரான ஷிவம் துபே, தனது பேட்டிங் ஸ்டைல் குறித்து பேசினார். சிக்ஸர் அடிப்பது பிடிக்கும் என்றாலும், கண்மூடித்தனமாக விளையாட மாட்டேன். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடவே முயற்சிப்பேன் என்றார். 

சக துடுப்பாட்டவீரர்கள் தடுமாறிய விக்கெட்டில், ஷிவம் துபே தனது ஆல்ரவுண்டர் திறமையால் முக்கியப் பங்காற்றினார். 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். பந்துவீச்சாளர்கள் நல்ல பந்துகளை வீசும்போதும் பவுண்டரிகள் அடிக்கத் தயாராக இருப்பேன். யார்க்கர், லென்த் பந்துகளைத் தவிர்த்து, ஷார்ட் மற்றும் மெதுவான பந்துகளை வீசுவார்கள் என தெரியும். அதற்காகவே காத்திருந்தேன் என்றார். 

மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தும்படி அணி தலைவரும், பயிற்சியாளரும் கூறினர். ஆனால் அது போட்டியின் சூழலைப் பொறுத்தது. ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆட வேண்டிய தேவை வந்ததாக உணர்ந்தேன் என்று துபே விளக்கினார். 

தனது பந்துவீச்சிலும் கடினமாக உழைத்து வருவதாகவும், அதற்கேற்ப பலன்கள் கிடைப்பதாகவும் துபே கூறினார். டி20 போட்டிகளில் சில நேரங்களில் ஓட்டங்களை கொடுத்தாலும் விக்கெட்டுகள் கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara