Feb 22, 2026 - 10:13 PM -
0
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் பேராளர் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கோவிந்தன் கருணாகரன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான கந்தையா சர்வேஸ்வரன், சிவனேசன், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த மாநாட்டில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதனை கீழே பார்வையிடலாம்,
--

