Feb 22, 2026 - 10:41 PM -
0
உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இன்றைய (22) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அஹமதாபாத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 63 ஓட்டங்களையும், டேவிட் பிராவிஸ் 45 ஓட்டங்களையும், திரிட்ஸ்டன் ஸ்டப்ஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

