செய்திகள்
வீடு புகுந்து கொள்ளையிட்ட நபரை கைது செய்த பொலிஸார்

Feb 23, 2026 - 08:05 AM -

0

வீடு புகுந்து கொள்ளையிட்ட நபரை கைது செய்த பொலிஸார்

மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மீகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் மீகொடை, புவக்வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடமிருந்து 4 தங்க மாலைகள், 3 தங்க மோதிரங்கள், ஒரு ஐம்பொன் பஞ்சாயுதம், ஒரு பதக்கம் மற்றும் 18,770 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன் தங்க ஆபரணங்களை அடகு வைத்ததற்கான 3 பற்றுச்சீட்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மீகொடை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05