செய்திகள்
களுத்துறையில் விபத்தில் இளைஞர் பலி!

Feb 23, 2026 - 10:17 AM -

0

களுத்துறையில் விபத்தில் இளைஞர் பலி!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசந்தி பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்தார். 

அத்துடன் பின்னால் அமர்ந்து பயணித்தவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு, சமகிபுர வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞராவார். 

குறித்த இளைஞர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, நாகசந்தி பகுதியில் வலதுபுறமாக உள்ள வீதிக்குத் திரும்ப முற்பட்டுள்ளார். 

இதன்போது முன்னால் வந்த காரில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து தொடர்பில் காரின் சாரதி களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05