Header Logo
Mogo Academy

விளையாட்டு
இலங்கைக்கு எதிரான போட்டியில் வில் ஜேக்ஸ் படைத்த சாதனை

Feb 23, 2026 - 12:12 PM -

0

இலங்கைக்கு எதிரான போட்டியில் வில் ஜேக்ஸ் படைத்த சாதனை
Mobitel inner

உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் அசத்தினார். 

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளராக வில் ஜேக்ஸ் சாதனை படைத்தார். 

இலங்கையின் பல்லகெலேவில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை -இங்கிலாந்து மோதின. 

இதில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களை எடுத்தது. 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. 

சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் வில் ஜேக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara