Header Logo
Mogo Academy

விளையாட்டு
அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு மறுப்பு!

Feb 23, 2026 - 12:44 PM -

0

அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு மறுப்பு!
Mobitel inner

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்று (22) இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண போட்டியில் இந்திய வீரர்கள் தேர்வு தொடர்பாக பயிற்சியாளர் கம்பீர், அணி தலைவர் சூர்ய குமார் யாதவ் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 

அணியின் துணை அணி தலைவர் அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்காதது விவாத பொருளாகியுள்ளது. 

அக்ஷர் படேல் ஓரங்கட்டப்பட்டது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் 2 ஓவர் வீசி 17 ஓட்டங்களை கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. துடுப்பாட்டத்திலும் 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். 

கடந்த காலங்களில் அக்ஷர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த உலக கிண்ணத்தில் தென் ஆப்பி ரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 5 ஆவது வீரராக துப்பெடுத்தாடினார். அவர் நீக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கம்பீரும், சூர்யகுமார் யாதவும் வீரர்கள் தேர்வில் சரியான முறையை கையாளவில்லை என்று கண்டனங்கள் எழுந்து உள்ளன. இதே போல மோசமாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara