Feb 23, 2026 - 02:10 PM -
0
Evolution Auto (Pvt) Ltd நிறுவனம் அண்மையில் Sterling Aftercare நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள Evolution Auto வாகன வர்த்தகநாமங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் எதிர்கால கொள்வனவாளர்கள் உயர் தரமான, முழுமையான சேவை ஆதரவை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ஒத்துழைப்பின் ஊடாக, Evolution Auto நிறுவனத்தின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நம்பகமான மற்றும் உயர்தரமான விற்பனைக்குப் பின்னரான (Aftercare) சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நுகேகொடை, கடவத்தை, இரத்மலானை, காலி, மினுவாங்கொடை ஆகிய இடங்களில் இலகுவில் அணுகக்கூடிய ஸ்டெர்லிங் சேவை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இலகுவில் அணுகக்கூடிய மற்றும் சான்றளிக்கப்பட்ட வாகன பராமரிப்பு தொடர்பில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், Sterling Aftercare தனது நம்பகமான நிபுணத்துவத்தை பல்வேறு பிரிவுகளில் வழங்குகிறது. இதில் விபத்துத் திருத்தப் பணிகள் (Collision repair), வாகன மெருகூட்டல் (Auto detailing), நடமாடும் சேவை ஆதரவு (Mobile support) மற்றும் வாகனத் திருத்தம் மற்றும் பராமரிப்பு சேவை போன்ற பல சேவைகள் உள்ளடங்கியுள்ளன.
இந்தப் பங்காளித்துவம் குறித்து Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களே நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களினதும் மையப்புள்ளியாக விளங்குகின்றனர். Sterling Aftercare உடனான இந்த பங்காளித்துவத்தின் மூலம், Evolution Auto வாகன உரிமையாளர்கள் தற்போது நாடளாவிய ரீதியில் பிரீமியம் சேவைகள் மற்றும் திருத்த வேலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனும் நிம்மதியுடன் இருக்க முடியும். வாடிக்கையாளரின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வசதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதே எமது இலக்காகும்.” என்றார்.
Sterling Aftercare Guarantee நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரவி பெரேரா தெரிவிக்கையில், “Sterling எப்போதும் நம்பகத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகின்றது. Evolution Auto நிறுவனத்துடன் இணைந்து வாகன உரிமையாளர்களுக்கு எமது நம்பகமான Aftercare Guarantee மூலம் தடையற்ற சேவை அனுபவத்தை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது மையங்கள் வாகனங்களை பரிசோதிப்பது முதல் வீதியோர உதவி (Roadside assistance) வரை அனைத்தையும் வழங்கி, வாகனம் செலுத்துவோருக்கு முழுமையான நம்பிக்கையை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.” என்றார்.
இந்தப் பங்காளித்துவம் கொண்டுள்ள, 'வாடிக்கையாளருக்கே முதலிடம்' எனும் அணுகுமுறையானது 'Aftercare Guarantee' மூலம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. இது உயர் தரமான, முழுமையாக பரிசோதிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பிரத்தியேகமான விற்பனைக்குப் பின்னரான ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்கிறது.
Evolution Auto வாகனங்கள் மற்றும் விற்பனைக்குப் பின்னரான ஆதரவு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: www.evolutionauto.lk அல்லது 0777 553 355

