Header Logo
Mogo Academy

விளையாட்டு
அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதில் சிக்கல்?

Feb 23, 2026 - 02:15 PM -

0

அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதில் சிக்கல்?
Mobitel inner

உலகக் கிண்ண தொடரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பை சிக்கலாக்கி உள்ளது. 

டி20 ஓவர் உலக கிண்ண தொடரில் அகமதாபாத்தில் நேற்று (22) நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியால் இந்திய அணியின் ரன் ரேட் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. 

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியாவுடன், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டம் நிறைவு பெற்ற நிலையில், ஜிம்பாப்வே அணியை வரும் ஏதிர்வரும் 26 ஆம் திகதி சென்னையிலும், மார்ச் 1 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியை கொல்கத்தாவிலும் இந்தியா எதிர்கொள்கிறது. 

இந்த 2 ஆட்டங்களிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அதேநேரம் தென் ஆப்பிரிக்கா அணியும், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை வீழ்த்த வேண்டும். 

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா அணி ஏதாவது ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவினால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வாய்ப்பு ஏற்படுவதுடன் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகும். 

எனவே, இந்திய அணி தனது இரண்டு சூப்பர் 8 போட்டியிலும் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara