வணிகம்
மைதானங்கள் முதல் வீதிகள் வரை: இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் துடுப்பு மட்டையில் தமது கையொப்பத்தை இட நாடு முழுவதும் உள்

Feb 23, 2026 - 02:23 PM -

0

மைதானங்கள் முதல் வீதிகள் வரை: இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் துடுப்பு மட்டையில் தமது கையொப்பத்தை இட நாடு முழுவதும் உள்

ஐசிசி ஆடவர் இருபதுக்கு இருபது உலகக் கோப்பைக்கு முன்பதாக, கிரிக்கெட் போட்டிக்காலத்தின் உற்சாகத்தை நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவதன் மூலம், சமூகங்கள் விளையாட்டோடு ஒன்றிணைவதற்கான ஒரு புதிய அனுபவத்தை ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

எமது நாட்டின் கிரிக்கெட் சிங்கங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய அழைப்பை மையமாகக் கொண்டு, அதன் மூலோபாய ஊடக மற்றும் விளம்பர செயல்படுத்தல் கூட்டாளராக சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் இந்த வாழ்த்துத் தெரிவிக்கும் பிரச்சாரத்தை ஹட்ச் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் சிறப்பம்சம் இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் துடுப்பு மட்டையாகும். இது 25 அடி உயரத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அவர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளார். தேசமாக ஒன்றிணைந்து, சங்கக்கார அவர்களுடன் இந்த கையொப்ப முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு ரசிகர்கர் அழைக்கப்படுகிறார்கள். இது எங்கள் கிரிக்கெட் அணிக்கு பெருமை, பேரார்வம், ஒற்றுமை மற்றும் கூட்டு ஆதரவின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது. 

ஹட்ச் ஒழுங்குபடுத்தியுள்ள நாட்டு மக்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் டிரக் வாகனம் இலங்கை முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் பயணித்து, போட்டியின் குழு நிலை ஆட்டங்கள் இடம்பெறும் காலப்பகுதி முழுவதும் வாழ்த்துக்களைச் சேகரிப்பதில் ஈடுபடும். இந்த துடுப்பு மட்டை நாடு முழுவதும் பயணிக்கும்போது, அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப்பிரயாணிகளாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள ரசிகர்கள் துடுப்பு மட்டையில் கையொப்பமிடவும், தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், நாட்டின் பெருமையாகத் திகழ்ந்து வருகின்ற இந்த விளையாட்டைக் கொண்டாடும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தருணத்தில் பங்கேற்பதற்கும் வரவேற்கப்படுகிறார்கள். 

இந்த முயற்சியானது, இத்தகைய அளவில் பிரயாணம், சமூகத்தால் முன்னெடுக்கப்படும் கிரிக்கெட் ஊக்குவிப்பு செயல்பாட்டை ஊக்குவித்து, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் அனுபவ ஈடுபாட்டை சங்கமிக்கச் செய்துள்ளது. டிரக் வாகனம் பயணிக்கும்போது, இது ஈடுபாட்டைத் தூண்டும் விளையாட்டுகள் மற்றும் உடனடி வெகுமதிகள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன், பயணிக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு துடிப்பான, கொண்டாட்ட சூழ்நிலையை உருவாக்குகிறது. 

நாடு தழுவிய இந்த வாழ்த்துத் தெரிவிக்கும் பிரச்சாரத்தின் மூலம், கிரிக்கெட் ரசிகர்களுடன் கிரிக்கெட் உணர்வை வலுப்படுத்துவதோடு, அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு சமூகமாக ஒன்றிணைத்து ஒரு தேசிய உணர்வை ஹட்ச் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஐசிசி ஆடவர் இருபதுக்கு இருபது உலகக் கோப்பையில் இலங்கை அணிதிரண்டு சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் நாட்டு மக்களை ஒரு சமூகமாக ஹட்ச் நிறுவனமானது ஒன்றிணைத்து நம் நாட்டு சிங்கங்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூகத்தோடு சேர்ந்து கொண்டாடுவதை நோக்கமாக கொண்டு இந்த செயற்பாட்டை செய்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05