செய்திகள்
நாட்டின் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி

Feb 23, 2026 - 03:44 PM -

0

நாட்டின் பணவீக்கம் ஜனவரியில் வீழ்ச்சி

2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ஜனவரி மாதத்தில் 2.4% வரை குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் 2025 டிசம்பர் மாதத்தில் 4.4% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் பணவீக்கம், 2026 ஜனவரி மாதத்தில் 3.4% ஆகக் குறைந்துள்ளது. 

அதேநேரம், 2025 டிசம்பர் மாதத்திற்கான உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 1.6% ஆகக் காணப்பட்டதுடன், 2026 ஜனவரி மாதத்திலும் அதே 1.6% என்ற மட்டத்தில் மாற்றமின்றித் தொடர்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05