வணிகம்
கொமர்ஷல் வங்கியின் பிட்ட ரட்ட வாசி பணம் அனுப்பும் ஊக்குவிப்புத்திட்டம் மீண்டும் ரூ. 6 மில்லியன் பணப் பரிசுகளுடன் வருகிற

Feb 23, 2026 - 06:16 PM -

0

கொமர்ஷல் வங்கியின்  பிட்ட ரட்ட வாசி பணம் அனுப்பும் ஊக்குவிப்புத்திட்டம் மீண்டும் ரூ. 6 மில்லியன் பணப் பரிசுகளுடன் வருகிற

கொமர்ஷல் வங்கியானது, 2026 ஆம் ஆண்டின் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, பணம் அனுப்புபவர்களுக்கு மேலும் பலனளிக்கும் வகையில் தனது வாடிக்கையாளர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து சிறந்த சேவையை வழங்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நோக்கில், வங்கியின் பிரபலமான 'பிட்ட ரட்ட வாசி' பருவகால ஊக்குவிப்புத்திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிரசாரம் மூலம் மொத்தம் ரூ. 6 மில்லியன் பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. 

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் பிரசாரம், வங்கியின் RemitPlus தளத்தின் மூலம் பெறப்படும் பணப் பரிமாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ரூ. 1 மில்லியன் பெறுமதியுடைய மிகப்பாரிய பரிசிலுடன், தலா ரூ. 50,000 பெறுமதியுடைய 100 பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. இந்தப் பிரசாரமானது 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டு பிட்ட ரட்ட வாசி பிரசாரத்தின் கீழ், பிரசாரம் நடைபெறும் காலத்தில் ComBankRemitPlus வழியாக பணம் பெற்ற 100 வாடிக்கையாளர்கள், வாராந்த சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டு தலா ரூ. 50,000 பெறுவர். பிரசார முடிவில், அந்த காலப்பகுதியில் தகுதியுடைய பணம் அனுப்புதல்களை பெற்ற அனைத்து வாடிக்கையாளர்கள் மத்தியிலும் சீட்டிழுப்பு நடத்தப்பட்டு ரூ. 1 மில்லியன் பெறும் அதிர்ஷ்டசாலி தெரிவு செய்யப்படுவார். RemitPlus மூலம் கொமர்ஷல் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்ட பணம் அனுப்புதல்கள் மட்டுமே இந்த சீட்டிழுப்பிற்கு தகுதி பெறும். வெற்றியாளர்களின் பெயர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் வங்கியின் சமூக ஊடக த்தளங்களில் வெளியிடப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. 

கொமர்ஷல் வங்கியின் ComBankRemitPlus என்பது நுட்பமான, குறைந்த செலவில், நேரடியாக இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்ற வசதி ஆகும், இது உலகின் பல நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் வசிக்கும் தம் உறவினர்களுக்கு பணத்தை உடனுக்குடன் அனுப்ப உதவுகிறது. 130க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள முகவர் மற்றும் வர்த்தகப் பங்காளர்கள் வலையமைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய RemitPlus ஆனது, எந்த நாளிலும், எந்த நேரத்திலும் பெறுநர்களின் கொமர்ஷல் வங்கி கணக்குகளில் பணம் உடனுக்குடன் சேர்க்கப்படுவதை உறுதிசெய்கிறது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05