Header Logo

வணிகம்
American Premium Water இனால் தொழிற்துறையின் முதலாவது வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டம் மற்றும் மொபைல் App அறிமுகம்

Feb 23, 2026 - 06:21 PM -

0

American Premium Water இனால் தொழிற்துறையின் முதலாவது வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டம் மற்றும் மொபைல் App அறிமுகம்

நம்பிக்கையான மற்றும் நிலையான நீரேற்றத் தீர்வுகளை வழங்குவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட முன்னோடி நிறுவனமும், சந்தை முன்னணியாளருமான American Premium Water நிறுவனம், தனது வாடிக்கையாளர் நம்பிக்கை (Loyalty) திட்டம் மற்றும் மொபைல் App ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2026 பெப்ரவரி 16 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த அறிமுகம், இலங்கையின் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வர்த்தகத் துறையில் இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக அமைந்ததுடன், இது ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைந்திருந்தது. தயாரிப்பு மற்றும் சேவையின் சிறப்பம்சங்களை நிலைநிறுத்துவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட American Premium Water இன் வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டம், வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதுடன், நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகத் தொடர்ச்சியான நீரேற்றப் பழக்கத்தையும் ஊக்குவிக்கின்றது. இத்திட்டமானது கூட்டாண்மை நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் மற்றும் வீடுகளுக்கு என காலாண்டுக்கு ஒரு தடவை வழங்கப்படும் வெகுமதித் திட்டத்தைக் கொண்டுள்ளதுடன், ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றுவோரை அங்கீகரித்து உற்சாகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள American Premium Water இன் மொபைல் App, வாடிக்கையாளர்கள் தமது அன்றாட நீரேற்றத்தைக் கண்காணிக்கவும், நீர் நுகர்வு முறைகளை அவதானிக்கவும், விநியோகம் தொடர்பான உடனுக்குடனான தகவல்களைப் பெறவும் மற்றும் கொடுப்பனவுகளை இலகுவாகக் கையாளவும் வசதியளிக்கின்றது. ஆரோக்கியமான நடைமுறைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பயன்படுத்துபவர்கள், தமது மாதாந்தக் கட்டணத் தள்ளுபடியைப் பெற்றுக்கொள்வதற்கும் தகுதியுடையவர்களாவர். 

இந்த அறிமுகம் தொடர்பில், American Premium Water இன் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பயாஸ் பஸால் கருத்துத் தெரிவிக்கையில், “இத்துறையில் ஒரு முன்னோடி நிறுவனம் என்ற வகையில், சிறந்த நீரேற்றத்தின் ஊடாக நல்வாழ்வை மேம்படுத்துவதே எமது தொடர்ச்சியான இலக்காகும். முறையான நீரேற்றமானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. எமது புதிய வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டம் மற்றும் மொபைல் app ஆகியவை இணைந்து, நீரேற்றத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு தடையற்ற பகுதியாக மாற்றுவதற்கான ஒரு முழுமையான தீர்வை வழங்குகின்றன. இம்முயற்சிகள் வெறும் குடிநீர் விநியோகத்துடன் நின்றுவிடாது, எமது வாடிக்கையாளர்கள் தமது உடல் ஆற்றல், புத்துயிர் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நிலையான பழக்கவழக்கங்களை உருவாக்குவதற்கு உதவுகின்றன.” என்றார். 

American Premium Water நிறுவனத்தின் வாடிக்கையாளர் நம்பிக்கை திட்டம் மற்றும் மொபைல் app ஆகியவற்றின் அறிமுகமானது, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அதன் பரந்த நோக்கத்துடன் ஒத்துப்போகின்றது. ஒவ்வொரு கொள்வனவினூடாகவும் இலங்கையின் குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்கும் வகையில், நிறுவனம் தனது OrphanCare முன்முயற்சி ஊடாக 90 க்கு மேற்பட்ட அனாதை இல்லங்களுக்கு இந்நிறுவனம் ஆதரவளித்துள்ளது. மேலும் கடந்த தசாப்த காலப்பகுதியில், போதிய வசதிகளற்ற சமூகங்களுக்கு 800,000 லீற்றர் சுத்தமான குடிநீரை வழங்கியுள்ளது. மேலும், 1.6 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கும் இந்நிறுவனம் வலுவூட்டுகிறது. 

தனது பணியாளர்களில் 45 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைப் பேணுவதுடன், 360 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக்கை மீள்சுழற்சி செய்தமை மற்றும் சூழலுக்கு உகந்த கண்ணாடிப் போத்தலை முதன்முதலாக அறிமுகப்படுத்தியமை குறித்தும் நிறுவனம் பெருமை கொள்கின்றது. 200 அடி ஆழமான குழாய் கிணற்றிலிருந்து பெறப்படும் இயற்கையான தாதுக்கள் நிறைந்த நீரை, இந்நிறுவனம் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கின்றது. 

30 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம், ISO, HACCP, SLS, ABWA மற்றும் HAC போன்ற அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்கள் மற்றும் விரிவான நீரேற்றத் தீர்வுகளுடன், American Premium Water நிறுவனமானது இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் நிலையான நீரேற்றப் பங்குதாரராகத் தொடர்ந்து திகழ்கின்றது. புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவற்றில் தனது பங்களிப்பை மென்மேலும் அதிகரிப்பதற்கும், பிராந்திய ரீதியில் தனது வணிக விஸ்தரிப்பை மேற்கொள்வதற்கும் நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இதன் ஊடாக, பல தலைமுறையினரை இன்னும் உற்சாகமாக மேலும் வாழ (live more) வழிவகுப்பதே நிறுவனத்தின் இலக்காகும்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title