செய்திகள்
சிம்பாப்வேக்கு பாரிய இலக்கு

Feb 23, 2026 - 09:00 PM -

0

சிம்பாப்வேக்கு பாரிய இலக்கு

டி-20 உலக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

வங்கடே மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Shimron Hetmyer அதிகபட்சமாக 85 ஓட்டங்களையும், Rovman Powell 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி Richard Ngarava மற்றும் Blessing Muzarabani ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதன்படி சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. 

இந்தச் சாதனைக்குச் சொந்தமான இலங்கை அணி, 2007 ஆம் ஆண்டில் கென்யாவிற்கு எதிராக 260 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05