செய்திகள்
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

Feb 24, 2026 - 06:56 AM -

0

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில் காயமடைந்த இரண்டு பேருந்து சாரதிகளும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

சாரதி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05