Header Logo

இந்தியா
விபத்துக்குள்ளான விமான நோயாளர் காவு வண்டி - அனைவரும் பலி

Feb 24, 2026 - 07:37 AM -

0

விபத்துக்குள்ளான விமான நோயாளர் காவு வண்டி - அனைவரும் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 

ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நோயாளர் காவு வண்டி (Air Ambulance) ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த விமானம் நேற்று (23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், இரவு 7:30 மணியளவில் ரேடார் அமைப்பிலிருந்து மறைந்துள்ளது. 

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

விபத்து ஒன்றில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக புதுடெல்லிக்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதில் பயணித்த ஒரு மருத்துவர், ஒரு தாதியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title