Header Logo
Mogo Academy

விளையாட்டு
மேற்கிந்திய தீவுகளின் வெற்றியால் பறிபோன இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு?

Feb 24, 2026 - 11:00 AM -

0

மேற்கிந்திய தீவுகளின் வெற்றியால் பறிபோன இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு?
Mobitel inner

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் 1 இல் இடம் பிடித்துள்ள மேற்கிந்திய தீவுகள் - சிம்பாப்வே அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களை குவித்தது. ஹெட்மையர் 85 ஓட்டங்களையும், ரோவ்மேன் பொவெல் 59 ஓட்டங்களையும் விளாசினார். 

பின்னர் 255 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிம்பாப்வே அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 5.35 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறியுள்ளது. 3.80 நெட் ரன் ரேட்டுடன் தென் ஆப்பிரிக்கா அணி 2 ஆம் இடத்தில உள்ளது. மைனஸ் 3.80 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா 3 ஆம் இடத்தில உள்ளது. 

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். ஒருவேளை அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். 

ஆகவே இந்திய அணியின் அரையிறுதி முடிவை தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கான போட்டி தான் முடிவு செய்யும் என்பதால் இந்திய ரசிகர்கள் அந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara