சினிமா
தவெக விஜய்க்கு பிரபல நடிகை எதிர்ப்பு!

Feb 24, 2026 - 03:22 PM -

0

தவெக விஜய்க்கு பிரபல நடிகை எதிர்ப்பு!

சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (23) நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனது பாணியில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி தனது பேச்சை தொடங்கினார். அவர் சொன்ன குட்டி ஸ்டோரி, "ஒரு பெரிய ஊரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நான்கு சாலை சந்திக்கும், நடுபகுதியில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை, தன் காலில் மண்ணை வீசி தள்ளி, சீறிக்கொண்டு நிற்கிறது. அதன் அருகே யாராலும் செல்ல முடியவில்லை. 

அந்தக் காளையை அடக்கி அமைதிபடுத்தினால்தான் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பும். அந்த ஊரில் இருக்கும் சிலருக்கு மட்டும்தான் அந்த காளை அடங்கும். ஆனால் அவர்கள் யாரும் அங்கு இல்லை. ஆனால், அந்தக் காளையை அடக்கியவர்களுடன் இருந்த சிலர் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள், நாங்கள் பார்க்காத காளையா என எண்ணி அதனை அடக்க முயன்றனர். ஆனால், ஒருவராலும் அந்தக் காளையை அடக்கமுடியாமல் போனது. அப்போது ஒரு சின்ன பையன், அந்தக் கூட்டத்தை விளக்கிவிட்டு நுழைகிறான். 

அப்போது அடிவாங்கியவர்கள், அனுபவம் நிறைந்த எங்களாலேயே முடியவில்லை என ஏளனம் செய்கிறார்கள். மறுபக்கம் சின்ன பையனை பார்த்து பரிதாபம் படும் கும்பல். அந்த பையன் தைரியமாக உள்ளே செல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்கிறான். சீறி முட்டவந்த காளை அருகே வந்ததும், தன் பாக்கெட்டில் இருந்த இரண்டு புல்லுக்கட்டை நீட்டுகிறான். அதனை பார்த்ததும், காளை அடங்கி அதனை சாப்பிட தொடங்கி அவனுடன் குழந்தைபோல் வந்துவிடுகிறது. வாய் இருக்கு என நசநசவென பேசியவர்கள் எல்லாம் தலைகுனிந்து நின்றார்கள். அங்குவந்த பெரியவர், அந்த சிறுவனிடம் கேட்டபோது, காளை பசியோடு இருப்பதை பார்த்தேன். 

அதனால், அதனைக் கொடுத்து அதனை அடக்கினேன் என்றான். இதை கேட்டு பெரியவர் சொன்னார், அனுபவம், பெரியவர், சிறியவர் என்பதெல்லாம் இல்லை. பிரச்சனை என்ன என்பதை அறிந்து அதனை சரிசெய்பவனே முக்கியம் என சொல்லி அந்தப் பெரியவர் சென்றுவிட்டார். ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாடு அரசியல் களம். பெரியவர் தான் நம் மக்கள், பாக்கெட்டுக்குள் கைவைத்துக்கொண்டுவந்த சிறுவன் விஜய் இல்லை. நாம் அனைவரும் சேர்ந்த தவெக" இவ்வாறு சொன்னார். 

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி விஜய் சொன்ன இந்த குட்டி ஸ்டோரிக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜுலி தான் அது. விஜயின் வேலூர் பேச்சு குறித்து தனது வலைதள பக்கத்தில் பிக் பாஸ் ஜுலி வெளியிட்ட வீடியோவில், "இப்போ தான் உங்க வேலூர் பரப்புரை பார்த்தேன். வழக்கம்போல் இந்த பரப்புரையிலும் ஒன்றும் இல்லை. 

எனினும், இன்று ஜல்லிக்கட்டு காளையை பற்றி ஒரு குட்டி ஸ்டோரி ஒன்று சொன்னீர்கள். அதை கேட்டபின் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. நீங்க போற போக்கில் ஜல்லிக்கட்டு புல்லுக்கட்டு எனக் கூறிவிட்டு செல்வீர்கள். உங்கள் கட்சியில் இருக்கிற பாதி பேர் மைனர் ஆட்கள். அவர்கள் நீங்கள் சொன்னதை வைத்து நானும் போய் புல்லுக்கட்டை காண்பிக்கிறேன் என்றால், எதாவது ஒன்னுக்கடக்க ஆகிவிட்டால் என்ன செய்வது?. 

ஐம்பது ஐம்பதாக இருக்கட்டும் அண்ணே. அதனை 500 ஆக்கிவிடாதீர்கள். கஷ்டப்பட்டு எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு அனுமதி வாங்கி வைத்துள்ளோம். உங்களின் ரசிகர்கள் புல்லுக்கட்டை காண்பித்து எதாவது ஒன்று ஆகிப்போனால் திரும்பி போராட திராணி இல்லை அண்ணே. கொஞ்சம் பார்த்து பக்குவமாக பண்ணுங்க. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போயிறாத அண்ணே" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது கவனம் பெற்று வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05