Header Logo

சினிமா
52 வயது நடிகையின் 33 வயது காதலன்?

Feb 24, 2026 - 04:55 PM -

0

52 வயது நடிகையின் 33 வயது காதலன்?

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர் ஜோடி. பெரிய வயது வித்தியாசத்தில் இருவரும் காதலித்து வந்ததால் தொடக்கம் முதலே இந்த ஜோடி கவனிக்க வைத்தது. அர்ஜுன் கபூரின் காதல் வாழ்க்கை பல வருடங்களாக பாலிவுட்டில் பேசுபொருளாக இருந்தது. அவருக்கும் மலைக்கா அரோராவுக்கும் 11 வயது வித்தியாசம் தான் முக்கிய காரணம். ஆம், அர்ஜுனை விட 11 வயது மூத்தவர் மலைக்கா அரோரா. 

மலைகா ஏற்கனவே அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 18 வயதில் அர்ஹான் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து அர்ஜுன் கபூருடன் பழக்கம் ஏற்பட்டது. எனினும் அது நீண்ட நாள் நீட்டிக்கவில்லை. 2024 இல் இருவரும் பிரிந்தனர். 

இந்த நிலையில் தான் தற்போது தன்னைவிட 19 வயது வித்தியாசம் கொண்ட இளைஞரை மலைக்கா காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த இளைஞர் ஹர்ஷ் மேத்தா. மும்பையைச் சேர்ந்த மிகவும் பிரபலமான வைர வியாபார குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். தற்போது 33 வயதாகும் இவரும் வைர விற்பனை தொழிலே செய்து வருகிறார். 

53 வயதாகும் மலைக்கா அரோரா உடன் ஹர்ஷ் மேத்தா கடந்த சில காலங்களாக வலம்வருகிறார். அப்போது இருந்தே மலைக்காவின் புதிய காதலன் இவர் என பேச்சுக்கள் எழுந்தன. ஏர்போர்ட்டில் ஒன்றாக செல்வது, இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்பது என இருவரும் வலம் வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதமே மும்பையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர். 

எனினும், இவர்களின் காதலை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இத்தாலியில் உள்ள ட்ரெவி நீரூற்றின் பின்னணியில் இருவரும் கட்டியணைத்தபடி செல்பி எடுத்துக்கொண்டனர். இத்தாலியில் விடுமுறை கொண்டாடுவதற்காக இருவரும் சென்ற நிலையில் இந்தப் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஆனால் இதுவரை மலைக்காவோ அல்லது ஹர்ஷ் மேத்தாவோ தங்களின் காதல் வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title