Feb 24, 2026 - 06:38 PM -
0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 'குரூப் 2'-க்கான மிக முக்கியமான ஆட்டத்தில் இன்று (24) இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளுக்கும் இப்போட்டி மிகவும் முக்கியமானதாகும். ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.
மறுபுறம், சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியின் முதல் ஆட்டம் (நியூசிலாந்துக்கு எதிரானது) மழையால் கைவிடப்பட்டதால், இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் அந்த அணி விளையாடுகிறது.

