செய்திகள்
இங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு

Feb 24, 2026 - 08:44 PM -

0

இங்கிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு

 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 45-வது லீக் (சூப்பர் 8 - குரூப் 2) ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

 

 இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.


பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சாஹிப்சாதா ஃபர்ஹான் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவர் 45 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து ஆடிய பாபர் அசாம் 24 பந்துகளில் 25 ஓட்டங்களையும், அதிரடியாக ஆடிய ஃபக்கர் சாமான் 16 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.


ஒரு கட்டத்தில் 14 ஓவர்கள் முடிவில் 107/3 என்ற வலுவான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி 170 ஓட்டங்களை எளிதாகத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இறுதி ஓவர்களில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு பாகிஸ்தான் அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக ஜேமி ஓவர்டன், சிறப்பாக ஆடிய ஃபர்ஹான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆதில் ரஷித், அதிரடி வீரர் ஃபக்கர் சாமானை வெளியேற்றினார்.


ஆட்டத்தின் 18-வது ஓவரில் பந்துவீசிய லியாம் டாசன் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இறுதி கட்டத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 164/9 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டது.


தற்போது 165 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தனது துடுப்பாட்டத்தைத் தொடங்கவுள்ளது. 

Comments
0

MOST READ
01
02
03
04
05