செய்திகள்
இலங்கை - நியூசிலாந்து போட்டிக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்!

Feb 25, 2026 - 06:17 AM -

0

இலங்கை - நியூசிலாந்து போட்டிக்கு விசேட போக்குவரத்துத் திட்டம்!

2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நாளை ( 25) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியைக் முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை இரவு 7:00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

 

பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கொழும்பு போக்குவரத்துப் பொலிஸாரால் பின்வரும் நடைமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன: 

போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் வீதிகள்: 

போட்டி நடைபெறும் நேரங்களில் பின்வரும் வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்: 

வின்சென்ட் பெரேரா மாவத்தை (கிரேண்ட்பாஸ் வீதி), பிரிட்டோ பாபாபுள்ளே பாலப் பகுதிச் சந்தியிலிருந்து பாபாபுள்ளே நோக்கி நுழைதல். 

பாபாபுள்ளே பாலத்திற்கு அருகில் இருந்து விளையாட்டு மைதானம் நோக்கி நுழைதல். 

செபஸ்தியன் கால்வாய் வீதி, மெல்வத்தை பாலத்திற்கு அருகில் இருந்து மைதானம் நோக்கி நுழைதல். 

100 அடி வீதி, பன்சல வீதிச் சந்தியிலிருந்து மைதானம் நோக்கி நுழைதல். 

மாளிகாவத்தை குறுக்கு வீதி மற்றும் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கிளை வீதிகள் ஊடாக மைதானத்திற்குள் நுழைதல். 

சதர்ம மாவத்தை பன்சல வீதி (பெந்தாராம வீதி) சந்தியிலிருந்து பன்சல வீதிக்குள் நுழைதல். 

வாகனத் தரிப்பிட வசதிகள்: 

ஆர்.பிரேமதாச மைதானத்தைச் சுற்றியுள்ள வாகனத் தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக பின்வரும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன: 

கிரேண்ட்பாஸ் மெக்ஸ்பார்க் வாகனத் தரிப்பிடம். 

சதொச வாகனத் தரிப்பிடம். 

செபஸ்தியன் கால்வாய் வாகனத் தரிப்பிடம். 

கோவில் வீதி, ஆப்பிள் வத்தை மற்றும் 100 அடி வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்த முடியும். 

ரசிகர்களின் பாதுகாப்பிற்காக சீருடை அணிந்த பொலிஸாரும், சிவில் உடையில் புலனாய்வுப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் மைதானத்திற்குள் நுழையும் போது பின்வரும் பொருட்கள் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது: 

பாரிய பைகள். 
கண்ணாடிப் போத்தல்கள். 
ட்ரோன் கருவிகள். 
சிறிய கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள். 
போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள். 

மைதானத்திற்குள் நுழையும் போது சிசிடிவி அவதானிப்பு, உடல் பரிசோதனை மற்றும் வாகனச் சோதனை என்பன இடம்பெறும் என்பதால், பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05