Feb 25, 2026 - 10:16 AM -
0
விரிவான சேவைத் தொகுப்பை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை தொடரும் வகையில் செலான் வங்கி அன்றாட வங்கித் தீர்வுகளுடன் 24/7 மொபைல் சேவை மற்றும் சுய சேவை ஆகியவற்றை வழங்குகிறது. இது யூரோமணியின் 2025ஆம் ஆண்டின் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிறந்த வங்கி விருதை வென்ற வங்கியின் தன்னிகரற்ற வாடிக்கையாளர் சேவைக்கான நீண்டகால பாரம்பரியத்தின் வெளிப்பாடாக அமைகின்றது. மேலும் இப் பரந்த சேவைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக சமூகத்தின் அன்றாட வாழ்வை மேம்படுத்துவதில் வங்கியின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றன. நாடெங்கிலும் அமைந்துள்ள செலான் வங்கியின் தானியங்கி டெல்லர் இயந்திரங்கள் (ATMகள்), பண வைப்பு இயந்திரங்கள் (CDMகள்) மற்றும் காசோலை வைப்பு kioskகள் (CDKகள்) ஆகியவற்றின் பரந்த வலையமைப்பு டிஜிட்டல் தீர்வுகளின் சேவைத் தொகுப்பை மேலும் பலப்படுத்துகின்றன. இவை நிலையான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை உறுதி செய்வதோடு வாடிக்கையாளர்களுக்கு பல்நோக்கு பரிவர்த்தனைத் தெரிவுகளை வழங்குகின்றன.
செலான் வங்கியுடன் (24/7) உடனடித் தொடர்புகளை ஏற்படுத்துவதை உறுதி செய்யக்கூடிய வகையில் அழைப்பு மையம் மற்றும் live chat ஆகிய சேவை கூறுகளை ஒருங்கிணைத்து செலான் மொபைல் வங்கி செயலி (Seylan Mobile Banking App) முழுமையான செலான் வங்கி அனுபவத்தை எளிதாக அணுகுவதை உறுதிசெய்கிறது. புதுப்பிக்கப்பட்ட செயலி ஆனது, வாடிக்கையாளர் அனுபவத்தை மெருகூட்டும் வண்ணம் பயன்படுத்த எளிதான இடைமுகத்தை கொண்டுள்ளது. மொழித் தடைகளைப் பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் எளிதாக நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள செலான் மொபைல் வங்கிச் செயலி ஆனது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் உள்ளடக்கியுள்ளது. இச் செயலியை Android மற்றும் iOS தளங்களில் பயன்படுத்தலாம்.
புதுப்பிக்கப்பட்ட செயலி, சேமிப்புக் கணக்குகள் மற்றும் கடனட்டை கணக்குகள் உட்பட பல சேவைகளை அணுகக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது வாடிக்கையாளர்கள் நிதிப் பரிமாற்ற வரலாறுகளைப் பார்வையிடவும், தொலைந்த அல்லது திருடப்பட்ட அட்டைகள் தொடர்பாக புகாரளிக்கவும் மற்றும் எதிர்கால கொடுப்பனவுகளுக்கு விருப்பமான பயனாளிகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது. இச் செயலி ஊடாக நிலையான வைப்புகளை கொண்ட வாடிக்கையாளர்கள் கடன் சேவைக்கு விண்ணப்பிக்கலாம். நாடெங்கிலும் உள்ள வங்கியின் 171 கிளைகளை தேடல், ஏற்கனவே உள்ள நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் கடன்களைப் பார்வையிடல் ஆகியன இதன் மேலதிக சிறப்பம்சங்கள் ஆகும்.
மொபைல் வங்கிச் சேவைக்கு மேலதிகமாக வாடிக்கையாளர் சேவை மற்றும் நம்பகத்தன்மையை வலியுறுத்துவதற்காக செலான் வங்கியின் நாடளாவிய வலையமைப்பிலுள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள், பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் காசோலை வைப்பு kioskகள் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்திற் கொண்ட வங்கித் தீர்வாக செலான் வங்கியின் ATMகள் ரூ.5,000, ரூ.2,000, ரூ.1,000, ரூ.500 மற்றும் ரூ.100 ஆகிய கலப்பு மதிப்புகளில் பணத்தாள்களை விநியோகிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இச் சேவையை வழங்கும் இரண்டு வங்கிகளில் ஒன்றாக செலான் வங்கி இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பணத்தாள் கலவையை நேரடியாகத் தெரிவு செய்து கொள்ளலாம். தமது தேவைகேற்ற பணத்தாள்களை எடுக்கும் வசதியை வழங்குவதால் வங்கி கருமபீடங்களில் காத்திருக்க வேண்டிய அவசியத்தை இது நீக்குகின்றது. இச் சேவை உடனடி மற்றும் நடைமுறை மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
செலான் மொபைல் வங்கிச் செயலி மற்றும் செலான் வங்கியின் ATM வலையமைப்பு ஆகிய இரண்டு சேவைகளும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான அதிநவீன பாதுகாப்பு செயல்முறைகளை கொண்டுள்ளன. இச் செயலியில் biometric பாதுகாப்பு உட்பட மேலதிக பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இதில் SMS, மின்னஞ்சல் மற்றும் SoftToken ஆகிய மூன்று வகையான One-Time கடவுச்சொல் (OTP) அம்சமும் உள்ளடங்கும். மேலும் இச் செயலி, வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு கேள்விகளைத் தயார்படுத்தும் திறனை வழங்குகிறது. இது அவர்களின் கணக்குகளுக்கு தமது தனிப்பட்ட பாதுகாப்பை நிறுவ திறம்பட அனுமதிக்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமையான வங்கித் தீர்வுகளை வழங்கும் வங்கியின் பண இயந்திர வலையமைப்பு, நிகழ்நேர பரிவர்த்தனை பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
செலான் வங்கி பிஎல்சியின் டிஜிட்டல் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர்/தலைவர் சமிந்த செனவிரத்ன கூறுகையில், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை முழுமையாக ஊக்குவிக்கும் தீர்வுகளை ஆதரிப்பவர்களாக, எங்கள் டிஜிட்டல் வங்கி தீர்வுகளின் சேவைத் தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கும் வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான கருவிகளை வழங்குகிறது. இந்த டிஜிட்டல் தீர்வுகளின் தொகுப்பு மூலம் எங்கள் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் தமது வளர்ச்சிப் பாதையில் புதிய உயரங்களை அடைய ஊக்குவிப்பதும் எங்கள் நோக்கமாகும். என்றார்.
செலான் வங்கியும் அதன் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளின் தொகுப்பும் அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உள்வாங்கல் மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. செலான் வங்கியானது இலங்கைப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பங்காளராகவும் வாடிக்கையாளர் சேவையில் உறுதியான வெற்றியாளராகவும் அதன் நிலைப்பாட்டைத் தொடர்கிறது.

