வணிகம்
CEAT Cares 16வது ஆண்டாக பாடசாலைகளில் வீதிப் பாதுகாப்பில் தலைமைத்துவத்தை தொடர்கிறது

Feb 25, 2026 - 10:29 AM -

0

CEAT Cares 16வது ஆண்டாக பாடசாலைகளில் வீதிப் பாதுகாப்பில் தலைமைத்துவத்தை தொடர்கிறது

இலங்கையின் முன்னணி நியூமேடிக் டயர் உற்பத்தியாளரான சியெட் களனி ஹோல்டிங்ஸ், (CEAT Kelani Holdings) பாதுகாப்பான போக்குவரத்தை மேம்படுத்தும் தனது நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக, நிறுவனம் 2025-26 ஆம் ஆண்டுக்கான தனது முக்கியமான ‘CEAT Cares’ பாடசாலை வீதிப் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகத் திட்டத்தை நிறைவு செய்துள்ளது. 

இந்த முயற்சியின் 16ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில், நிறுவனம் தனது சமூக வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் மேலும் 30 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தினால் இதுவரை பலன் பெற்றுள்ள பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பாடசாலைக்கும் ஐந்து வீதி சமிக்ஞைப் பலகைகள், 10 போக்குவரத்துக்கூம்புகள், மற்றும் ஐந்து போக்குவரத்து காவலர் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த நிதியாண்டில் மொத்தம் 600 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பாடசாலைப் போக்குவரத்து முகாமைத்துவக் குழுக்களின் பணியை எளிதாக்கி, மாணவர்களும் மற்றைய வீதிப் பயணிகளும் பாதுகாப்பாகச் செல்ல உதவுகின்ற. 

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள், சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள சியெட் விற்பனையாளர் பிரதிநிதிகள் பங்கேற்புடன் நடைபெற்றன. 2025-26 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்த சியெட் களனி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ஷமல் குணவர்தன அவர்கள் சியெட் நிறுவனம் நிலைநிறுத்தும் அனைத்துப் பணிகளின் மையக்கரு பாதுகாப்பு ஆகும். நாம் தயாரிக்கும் ஒவ்வொரு டயரிலும் அது பிரதிபலிக்கிறது. ‘CEAT Cares’ போன்ற முயற்சிகள் மூலம், அந்தப் பாதுகாப்பு உறுதிப்பாட்டை நாம் சேவை செய்யும் சமூகங்களுக்கும் விரிவுபடுத்துகிறோம். போக்குவரத்தை தினமும் பாதுகாப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும். - இதுவே வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய எம்மை ஊக்குவிக்கிறது. 

இந்த நாடு முழுவதும் நடைபெறும் தொடர் முயற்சியின் மூலம், சியெட் களனி நிறுவனம், பாதுகாப்பான போக்குவரத்தை உருவாக்குவது என்பது வாக்குறுதியாக மட்டுமல்லாது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகவும் இருப்பதை நிரூபித்துள்ளது, என்று அவர் மேலும் கூறினார். 

2025-26 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் பலனடைந்த 30 பாடசாலைகள் பின்வருமாறு: தங்கொட்டுவ பாலிகா மகா வித்யாலய, தங்கொட்டுவ; வணக்கத்துக்குரிய ஸ்ரீ ரத்னஜோதி ஆரம்பப் பாடசாலை யோகியான்; விக்ரமசில மத்திய மகா வித்யாலய, கிரியுள்ள்; சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி, குருநாகல்; அதுகல்புர பிரின்ஸ் கல்லூரி, குருநாகல்; நூர் முஸ்லிம் மகா வித்யாலயம், உக்குவல; வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி, மெனிக்கின்ன; மெனிக்கின்ன மகா வித்யாலய, மெனிக்கின்ன; கொட்டகலை தமிழ் மகா வித்யாலயம், கொட்டகலை; ரணசிங்க பிரேமதாச தேசிய பாடசாலை, ஹசலக்க; மஹியங்கன தேசிய பாடசாலை, மஹியங்கன; சேவமுக்த கந்தவுர மகா வித்யாலய, பொலன்னறுவ; கிரிதலேகம மகா வித்யாலய, கிரிதலே; ஹபரண மகா வித்யாலய, ஹபரண; அக்கிரபோதி கல்லூரி, கந்தாளை; பெரத்துவெலி முஸ்லிம் மகா வித்யாலயம், கந்தாளை; சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி; திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ்ப்பாணம்; மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, மீசாலை; முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு 4; புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு 4; அலெக்ஸாண்ட்ரா கல்லூரி, மறதானை; புனித ஜோசப் கல்லூரி, நுகேகொடை; புனித பிரான்சிஸ் கல்லூரி, தலுகம்; வித்யார்தன பிரிவென, ஹொரண; களுத்துறை வித்யாலய, களுத்துறை; புனித மேரீஸ் கல்லூரி, மத்துகம; புவோனாவிஸ்டா கல்லூரி, காலி; அலுத் வௌ ஆரம்பப் பாடசாலை, அங்குணகொலபெலெஸ்ஸ; மற்றும் சுமனா மத்திய மகா வித்யாலய, நிவித்திகல. 

பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும் தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைவதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் துணைபுரிகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பயணிகள் கார்கள், வேன்கள், SUVகள்,வர்த்தக வாகனங்கள் (பயாஸ்-பிளை மற்றும் ரேடியல்), மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான நியூமேடிக் டயர்கள் அடங்கும். 

சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு முன்பு, அடுத்த 18 மாதங்களுக்கு மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05