Header Logo

இந்தியா
தங்கை கண்முன்னே தந்தையை கொலை செய்த மகன்

Feb 25, 2026 - 10:32 AM -

0

தங்கை கண்முன்னே தந்தையை கொலை செய்த மகன்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், லக் லக்னோவில் நீட் தேர்வு அழுத்தத்தால் 21 வயது இளைஞன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

லக்னோவின் ஆஷியானா பகுதியில் வைத்திய பரிசோதனை மையம் நடத்தி வந்தவர் பிரதாப் சிங் (49).

இவரது மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் மகன் மற்றும் மகள் உடன் வசித்து வந்தார். 

தனது 21 வயது மகன் அக்ஷத்தை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி பிரதாப் சிங் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். 

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 20 அன்று வீட்டில் இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அக்ஷத்தின் தங்கையும் அங்கு இருந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியால் அக்ஷத், வீட்டில் தந்தை பிரதாப் சிங் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த ரைபிளை எடுத்து அவரை சுட்டுக் கொன்றார். 

மேலும் தங்களை கண் முன்னேயே உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில உடல் பாகங்களைச் சதரோனா கிராமம் அருகே வீசிவிட்டு, மீதமுள்ளவற்றை வீட்டில் இருந்த நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் மறைத்து வைத்துள்ளார். 

இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என தங்கையை அக்ஷத் மிரட்டியுள்ளார். 

பிரதாப் சிங்கை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். 

அக்ஷத்தின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். 

டிரம்மில் வைக்கப்பட்டிருந்த உடலின் பாகங்களை பொலிஸார் மீட்ட நிலையில் கடந்த 23 ஆம் திகதி அக்ஷத் கொலை வழக்கில் கைது செய்யபட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title