Header Logo

வணிகம்
World Finance விருதை தொடர்ந்து 12-ஆவது தடவையாக பெற்று, ஒப்பற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள செலிங்கோ லைஃப்

Feb 25, 2026 - 10:39 AM -

0

World Finance விருதை தொடர்ந்து 12-ஆவது தடவையாக பெற்று, ஒப்பற்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் நிறுவனமானது World Finance வழங்கும் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம் என்ற மதிப்புமிக்க சர்வதேச விருதை 2025 ஆம் ஆண்டிற்காக தொடர்ந்து 12-ஆவது தடவையாக மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், முன்னெப்போதும் இல்லாத சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. 

இந்த விருதானது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தை உலகின் மிக மதிப்புமிக்க ஆயுள் காப்புறுதி நிறுவனங்களின் வரிசையில் முன்னிலைப்படுத்துகிறது. இதற்கிணங்க செலிங்கோ லைஃப் நிறுவனமானது Sun Life (கனடா), Acenda (அவுஸ்திரேலியா), China Pacific Insurance (சீனா), CNP Assurances (பிரான்ஸ்), The Talanx Group (ஜேர்மனி), Max Life Insurance (இந்தியா), Nippon Life Insurance Company (ஜப்பான்), Swiss Life (சுவிட்சர்லாந்து), Aviva (ஐக்கிய இராச்சியம்) மற்றும் MassMutual (அமெரிக்கா) போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கௌரவமான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

இந்த சமீபத்திய கௌரவம் தொடர்பாக செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிறைவேற்றுத்தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்; தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக சர்வதேச அளவிலான இந்த அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது, எமது செயல்பாட்டு பண்பாட்டின் கட்டுப்பாடு மற்றும் நீண்டகாலத் திட்டத்தின் தெளிவை பிரதிபலிக்கிறது. பல்வேறு பொருளாதாரச் சுழற்சிகளிலும் நிலைத்திருக்கும், நிர்வாகத் தரநிலைகளில் எவ்வித சமரசமும் இல்லாத, மேலும் எமது காப்புறுதியாளர்களின் மற்றும் நாம் சேவை செய்யும் சமூகங்களின் மாறிவரும் தேவைகளுடன் ஆழமாக ஒன்றிணைந்த ஆயுள் காப்புறுதி நிறுவனத்தை உருவாக்குவதிலேயே எமது கவனம் எப்போதும் இருந்துள்ளது. 

World Finance இன் இந்த விருதானது, செயல்பாட்டு சிறப்புத் திறன், நிதி வலிமை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றை தொடர்ந்து வெளிப்படுத்தும் நிறுவனமாக செலிங்கோ லைஃப்பை அங்கீகரிக்கிறது.வெற்றியாளர்கள், பல்வேறு செயல்திறன் குறியீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கடுமையான மதிப்பீட்டு செயல்முறையின் பின்னர் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில் இடர் மதிப்பீடு மற்றும் காப்புறுதி ஒப்புதல் செயல்திறன், காப்புறுதி கொள்கை பராமரிப்பு நடைமுறைகள், இடர் வெளிப்பாடு, வாடிக்கையாளர் தக்கவைப்பு, கோரிக்கைத் தீர்வு கால அவகாசம், புதிய வாடிக்கையாளர் அனுமதி, மேலும் கட்டுப்பண வருமானம், சந்தைப் பங்கு, வாழ்நாள் நிதி வளர்ச்சி மற்றும் லாபத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும் நிதி நிலைத்தன்மை போன்றவை அடங்கும். 

செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (“People’s Life Insurance Service Provider of the Year”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title