Feb 25, 2026 - 11:15 AM -
0
எவன்கார்ட் நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு ரிட் மனுக்களை ஆரம்பகட்ட பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

