செய்திகள்
உலக நாடுகளுக்கான சுங்கவரியை நியாயப்படுத்திய ட்ரம்ப்!

Feb 25, 2026 - 11:57 AM -

0

உலக நாடுகளுக்கான சுங்கவரியை நியாயப்படுத்திய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உலக நாடுகளிடமிருந்து சுங்கவரி வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளார். 

இந்தச் சுங்கவரி வசூல் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு, தனது நாட்டு மக்கள் செலுத்தும் வருமான வரியை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்க மக்களுக்குப் பெரும் சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுமார் 1 மணித்தியாலம் 48 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், "யுகத்திற்கு ஏற்ற ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு" தாம் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

முன்னதாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ட்ரம்ப் இதன்போது மீண்டும் கடுமையாக விமர்சித்தார். 

அமெரிக்க ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிப்பதற்காக நிகழ்த்தப்படும் 'அரசின் நிலை' உரையாக இது அமைந்திருந்தது. ட்ரம்பின் கருத்துப்படி, அமெரிக்கப் பொருளாதாரத்தின் தற்போதைய எழுச்சிக்குச் சுங்கவரி வசூலிப்பதே பிரதான காரணமாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05