Header Logo

சினிமா
நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபீஸ்ல இருப்பேன்!

Feb 25, 2026 - 01:23 PM -

0

நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபீஸ்ல இருப்பேன்!

வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த 23 ஆம் திகதி தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். 

அந்த கூட்டத்தில் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டிருந்தார்.

 

விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை ஆபாச வார்த்தைகளில் விமர்சித்தனர். 

இந்நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனதிக்ரு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நோக்கி விஜய் பேசியதைப் போலவே, ஸ்லோ மாடுலேஷனில் பேசி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில், "விஜய் அண்ணா உங்க வேலூர் பரப்புரை பார்த்து, அதில் ஒன்னும் இல்லை என்ற ஆதங்கத்தில் நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன். அதை பார்த்த உங்க ரசிகர்கள்.. ஆமாம், உங்க ரசிகர்கள் தான். அவர்கள் இன்னும் அரசியல்வயப்படவில்லை. 

உங்கள் ரசிகர்கள் என்னை எல்லா சமூக வலைத்தளங்களிலும் கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மைனர் பசங்க கிட்ட முக்கால்வாசி போலி ஐடிகள் தான் இருக்கிறது. 

அதை வைத்துக் கொண்டுதான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை நீக்கவும் மாட்டேன், எனது கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். 

என்னை மிரட்டினால் பரவாயில்லை, ஆனா என்னைச் சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 

விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்கணும்னா நான் என் வீட்டில் இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன். 

என்னைத் திட்டுனா என்னை திட்டுற மாதிரி தான். மக்களைத் திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்துப் போட மாட்டேன். 

ஒரு பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் எவ்வளவு மரியாதையும், மதிப்பும், பாதுகாப்பும் உங்க ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவுக்கு கீழ் இருக்குற கமெண்ட்களை நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

 

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title