Header Logo

சினிமா
‘ரஜினி173’ படப்பிடிப்பு ஏப்ரலில் தொடக்கம்!

Feb 25, 2026 - 05:49 PM -

0

‘ரஜினி173’ படப்பிடிப்பு ஏப்ரலில் தொடக்கம்!

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். 

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ‘ரஜினி173’. இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது. 

இதனிடையே, ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டார் சிபி சக்கரவர்த்தி. அப்போது பேசுகையில், ‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இப்படத்தினை ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. 

’ரஜினி173’ படத்தினை முடித்துவிட்டு தான், கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை நெல்சன் இயக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 

ரஜினி நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘ஜெயிலர் 2’ இருக்கிறது. எப்போது வெளியீடு என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title