Header Logo
இந்தியா
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி சாதனை!

Feb 26, 2026 - 12:11 PM

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி சாதனை!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை பெற்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் இந்த பிரமாண்ட மைல்கல்லை எட்டிய உலகின் முதல் மற்றும் ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையை அவர் இன்று (26) பெற்றுள்ளார்.


பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் தளத்தில் இணைந்தார். கடந்த பத்தாண்டுகளில் தனது அதிகாரப்பூர்வப் பயணங்கள், மக்கள் சந்திப்புகள், சர்வதேச இருதரப்பு உறவுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பகிர்ந்து, இளைஞர்கள் மற்றும் உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.


தற்போதைய நிலவரப்படி, உலக அளவிலான மற்ற நாட்டுத் தலைவர்களை விட அவர் பல மடங்கு முன்னிலையில் உள்ளார்:

நரேந்திர மோடி (இந்தியா): 10 கோடி (100 மில்லியன்)

டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா): 4.32 கோடி (இரண்டாமிடம்)

பிரபோவோ சுபியாண்டோ (இந்தோனேசியா): 1.5 கோடி

லூலா டா சில்வா (பிரேசில்): 1.44 கோடி

ரெசெப் தையிப் எர்டோகன் (துருக்கி): 1.16 கோடி

ஜேவியர் மிலே (அர்ஜென்டினா): 64 லட்சம்

மோடிக்கு அடுத்தபடியாக உள்ள இந்த ஐந்து முக்கிய உலகத் தலைவர்களின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களின் மொத்த எண்ணிக்கையைச் சேர்த்தால் கூட, அது பிரதமர் மோடியின் தனிப்பட்ட பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைவு என்பது அவரது அபரிமிதமான டிஜிட்டல் செல்வாக்கைக் காட்டுகிறது.


இதேவேளை,  பிரதமர் மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள நிலையிலேயே இந்த சமூக வலைத்தள மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றைய தினம் இஸ்ரேலிய நாடாளுமன்றமான 'கெனெசெட்'டில் உரையாற்றிய அவருக்கு, இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவுகளை வலுப்படுத்தியமைக்காக இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் உயரிய விருதான "கெனெசெட் சபாநாயகர் பதக்கம்" (Speaker of the Knesset Medal) வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278