Feb 26, 2026 - 11:25 AM -
0
ஒரே கட்டணத் தொகையின் கீழ் மிகவும் அத்தியாவசியமான 15 பயன்பாட்டு Appsகளை இடைவிடாது உபயோகிக்கும் வாய்ப்பினை வழங்கி, திருப்புமுனையை ஏற்படுத்தும் “HUTCH 15” என்ற ஸ்மார்ட்போன் திட்டத்துடன் இலங்கையின் டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் முயற்சியை ஹட்ச் முன்னெடுக்கின்றது.
மக்களின் ஆர்வங்களை கவனத்தில் கொண்டு பிரபலமான 15 Appsகள் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கைப் பிரஜைகள் மத்தியில் தனிப்பட்ட திறன்களை வளர்த்து, செயல்திறனை மேம்படுத்தி, நாட்டின் உற்பத்தித்திறனுக்கு பங்களிக்கின்ற பல்வேறு Appsகளை இது உள்ளடக்கியுள்ளமை மிகவும் முக்கியமான சிறப்பம்சமாகும்.
தொடர்பாடல், தொழில்நிலை மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஒன்றிணைந்து பணியாற்ற வழிவகுக்கும் தளங்கள் என பல்வேறு திறன்களைக் கொண்ட Appsகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. மேலும் அனைத்து பிரதான சமூக வலைத்தளங்கள் மற்றும் நேரலை (streaming) Appsகளையும் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்ட பாரம்பரியமான திட்டங்களுக்கு அப்பாற்சென்று, ChatGPT, Gemini, Discord மற்றும் LinkedIn போன்றவற்றை கட்டுப்பாடின்றி அணுகும் வியப்பான உள்ளடக்கங்களை HUTCH 15 கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை உள்வாங்கிக் கொள்ளல், டிஜிட்டலைக் கற்றறிதல், தொழில்ரீதியான மேம்பாடு, மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை விரைவுபடுத்தி, டிஜிட்டல் முன்னிலை வகிப்பது விரிவடைந்து செல்லும் உலகில் வெற்றி காண்பதற்கு இலங்கை மக்களுக்கு வலுவூட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
WhatsApp, YouTube, Instagram, TikTok, Facebook, X, Telegram, Messenger, Snapchat, Viber மற்றும் Imo போன்ற தொடர்பாடல், அறிவு, ஊடகம், மற்றும் மின்- வர்த்தகம் (e-commerce) ஆகியவற்றுக்கு இடமளிக்கின்ற ஏனைய Appsகளை இது கொண்டுள்ளதுடன், இணைப்புக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் அவை அனைத்தையும் இடைவிடாது அணுக முடியும். ஏனைய அனைத்திற்கும் பயன்டுத்தக்கூடிய வகையில் இன்னும் மேலதிகமாக 35GB Data, எந்த வலையமைப்பிற்கும் Unlimited அழைப்புக்கள், ஹட்ச் நிறுவனம் வழங்கும் ஏனைய பல்வேறுபட்ட, மதிப்புக் கூட்டப்பட்ட டிஜிட்டல் சேவைகளை பரீட்சார்த்தமாக முயற்சித்துப் பார்ப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் முற்கூட்டியே வழங்கப்படும் ரூபா 100 Reload கூட இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகின்ற அனைவருக்கும் விரிவான டிஜிட்டல் கட்டமைப்பிற்கான அணுகலை HUTCH 15 திட்டம் அவர்களுக்கு வழங்குகின்றது. அனைத்தையும் உள்ளடக்கிய கட்டணத் தொகையாக மாதமொன்றுக்கு ரூபா 1,199 என்ற கட்டணத்தில் இது கிடைக்கப்பெறுவதுடன், எவருக்கும் ஏற்ற இலகுவான மற்றும் கட்டுபடியான திட்டமாகக் காணப்படுகின்றது. நாடெங்கிலும் வியாபித்துள்ள எந்தவொரு சூழ்நிலையிலும் இயங்க வல்ல மற்றும் வலுவான வலையமைப்பின் பக்கபலத்தையும் இது கொண்டுள்ளது.
ஹட்ச் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது நாட்டுப் பிரஜைகளுக்கு வலுவூட்டி, பரீட்சார்த்தமாக முயற்சி செய்து, அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலான தீர்வுகளை வடிவமைக்க வேண்டும் என்ற எமது நம்பிக்கையின் வெளிப்பாடே HUTCH 15 திட்டம். அதிக கட்டணங்கள் எதுவுமின்றி, உளவியல் ரீதியான முட்டுக்கட்டைகளைப் போக்கி, டிஜிட்டல் அம்சங்களை ஆராய்வதை ஊக்குவித்து, வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் எமது தீர்வுகளையும், வாடிக்கையாளர் அனுபவங்களையும் வடிவமைக்க வேண்டும். ஒரு திட்டம் என்பதற்கும் அப்பால், அனைவருக்கும் வளர்ச்சி, சுய வெளிப்பாடு, மற்றும் வாய்ப்பினை வழங்கும் ஒரு வரப்பிரசாதமாக HUTCH 15 அமைந்துள்ளது.”
e-SIM உள்ளடக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு உடனடியாகவே இத்திட்டத்தை www.hutch.lk என்ற நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாக மிகவும் சௌகரியமாகப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய வாடிக்கையாளர்களாயின் சாதாரண SIM மூலமாக இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஹட்ச் வாடிக்கையாளர் அனைவரும் Hutch App மூலமாக அல்லது ரூ.1199 recharge செய்வதன் மூலமாக இத்திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

