Feb 26, 2026 - 05:25 PM -
0
Zone24x7 நிறுவனமானது தொழில்நுட்ப துறையில் 2025 ஆம் ஆண்டை குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் நிறைவு செய்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப போட்டிகளாக விளங்கும் மூன்று முக்கிய போட்டிகளில் மொத்தம் ஏழு விருதுகளை பெற்று தனது 22 ஆண்டு வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஆண்டுகளில் ஒன்றாக இந்த ஆண்டை மாற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்காக Zone24x7 உருவாக்கிய தொழில்துறை தானியங்கி விற்பனை இயந்திரத்திற்கான [Industrial Vending Machine] தீர்வே இந்த விருதுகளுக்குக் காரணமாக அமைந்தது. இந்த புத்தாக்கத்திற்கு வழிவகுத்த தொழில்நுட்பம் தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. குறிப்பாக,ஆசிய பசிபிக் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பக் கூட்டமைப்பு விருதுகள் 2025 (Asia Pacific ICT Alliance Awards -APICTA 2025) போட்டியில் இரண்டாம் துணை வெற்றியாளர் விருதை வென்று, சர்வதேச அளவில் நிறுவனத்தின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விருதுகள் வெறும் பாராட்டுச் சான்றுகளாக மட்டும் அல்லாது நிறுவனங்களுக்கு உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய, நடைமுறை சார்ந்த தீர்வுகளை உருவாக்கி, தெளிவான வர்த்தகப் பலனை வழங்கும் Zone24x7 நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்துகின்றன. ஆசிய–பசிபிக் பிராந்தியத்தின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிட்டு பெற்ற இந்த வெற்றிகள், Zone24x7 நிறுவனத்தின் விரிவாகி வரும் உலகளாவிய இருப்பையும், புத்தாக்கங்களை வாடிக்கையாளர்களின் அன்றாட செயல்பாடுகளில் உட்புகுத்தும் அதன் நோக்கத்தையும் வலியுறுத்துகின்றன.
Zone24x7-இன் விருது பயணம் SLASSCOM தேசிய இயற்பியல் விருதுகள் 2025 நிகழ்வில் ஆரம்பமானது. இதில் உற்பத்தித் துறைக்கான சிறந்த புத்தாக்கத் தயாரிப்பு என்ற பிரிவில் தேசிய வெற்றியாளராகவும், சிறந்த புத்தாக்கத் தயாரிப்பு (பொது பிரிவு) பிரிவில் தேசிய முதல் துணை விருதையும் நிறுவனம் பெற்றது. அத்துடன், மேல் மாகாணத்தில் இரண்டு மாகாண வெற்றியாளர் விருதுகளையும் கைப்பற்றியது.
இந்த வெற்றித் தொடர் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப விருதுகள் 2025 [National ICT Awards – NBQSA 2025] நிகழ்விலும் தொடர்ந்தது. இதில் உற்பத்தி, பொறியியல் மற்றும் கட்டுமான பிரிவில் தங்க விருதையும், ஆண்டின் IoT [இணையப் பொருட்கள்] தொழில்நுட்பம் என்ற சிறப்பு விருதையும் Zone24x7 வென்றது.
“உண்மையான வர்த்தக தேவைகளை மையமாக வைத்து தொழில்நுட்பத்தை உருவாக்கும் எமது அணுகுமுறை சரியானது என்பதை 2025 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியுள்ளது,” என Zone24x7 நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Neschae Fernando தெரிவித்தார். “2026 ஐ நோக்கி நகரும் இந்த நேரத்தில், , செயற்கை நுண்ணறிவு, தானியக்கம் மற்றும் இணைக்கப்பட்ட முறைமைகளைப் பயன்படுத்தி நிறுவனங்களின் உற்பத்தித்திறன், செயல்பாட்டு வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவு எடுக்கும் திறனை மேம்படுத்துவதே எமது முக்கிய இலக்காக உள்ளது” என்றார்.
அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்ட Zone24x7 நிறுவனம், இலங்கையில் உலகத் தரத்திலான தொழில்நுட்ப மையத்தையும் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் இந்நிறுவனம், செயற்கை நுண்ணறிவு, IoT மற்றும் நிறுவனத் தளங்களை ஒருங்கிணைத்து, பெரிய அளவிலான சிக்கலான செயல்பாட்டு சவால்களுக்கு தீர்வு வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றதாக விளங்குகிறது.
Zone24x7 நிறுவனத்தின் தொழில்நுட்பப்பிரிவில்,இயக்கத்திறனை மேம்படுத்தி, முறைமைகளின் அறிவினையும் மனித உற்பத்தித்திறனையும் உயர்த்தும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த Generative AI திறன்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, டிஜிட்டல் மற்றும் இயற்பியல் தரவு ஆதாரங்களை இணைக்கும் AI அடிப்படையிலான தானியக்க தளங்கள், மேலும் வீடியோ மற்றும் படத் தரவுகளிலிருந்து உடனடி தகவல்களை வழங்கும் Cognitive Vision Analytics Platform ஆகியவையும் இதில் அடங்கும். RFID அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் Warehouse Management Systems ஆகியவற்றையும் Zone24x7 வழங்கி வருகிறது.
“வன்பொருள் , மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்து, ஏற்கனவே உள்ள நிறுவன முறைமைகளுடன் இடையூறு இல்லாமல் இணையும் முழுமையான தீர்வுகளாக மாற்றுவதில்தான்எமது வெற்றி தங்கியுள்ளது,’’என Zone24x7 நிறுவனத்தின் பொது முகாமையாளர் விபுல லியானாராச்சி தெரிவித்தார்.
“2026 ஐ நோக்கி நிறுவனங்கள் முன்னேறும் இந்த சூழலில், செயல்பாடுகளை நவீனப்படுத்தி, திறமையாக விரிவுபடுத்தி, தரவிலிருந்து அதிக பெறுமதியை பெற அவர்களுக்கு தடையில்லா வழிகளை வழங்குவதை நோக்கமாகக்கொண்டே நாம் செயற்படுகிறோம்” என்றார்.
விருதுகள் பெற்ற ‘’தொழில்துறை தானியங்கி விற்பனை இயந்திரத்திற்கான தீர்வானது , Zone24x7 பின்பற்றும் அணுகுமுறை க்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. IoT அடிப்படையிலான வன்பொருள் , அறிவுசார் மென்பொருள் மற்றும் பகுப்பாய்வு திறன்களை ஒருங்கிணைத்து, உற்பத்தி மற்றும் தொழில்துறை சூழல்களில் கையிருப்பு முகாமைத்துவத்தை தானியக்கமாக மாற்றி செயல்திறனை உயர்த்துகிறது. இது ஒரு தனி தயாரிப்பாக மட்டும் அல்லாமல், ஒவ்வொரு வாடிக்கையாளரின் செயல்பாட்டு இலக்குகளுக்கும் ஏற்ப தீர்வுகளை வடிவமைத்து வழங்க Zone24x7 எவ்வாறு பங்காளியாக செயல்படுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடனும், வலுவான ஆய்வு மற்றும் அபிவிருத்தி அடித்தளத்துடனும் செயல்படும் Zone24x7, தற்போது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவினாலான [AI] தானியக்கம், நுண்ணறிவு பகுப்பாய்வு முறைமைகள் மற்றும் எந்த முறைமைக்கும் சார்பில்லாத (system-agnostic) கட்டமைப்புகளில் மேலதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. வேகமாக மாறும் தொழில்நுட்ப சூழலில் நிறுவனங்கள் வழிநடத்திச் செல்லும் இந்த காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் ஏற்கவும் , ஊழியர்களின் உற்பத்தித்திறனை உயர்த்தவும், மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கு அப்பால் நிலைத்த செயல்பாடுகளை உருவாக்கவும் உதவும் நீண்டகால தொழில்நுட்ப பங்காளராக தன்னை Zone24x7 நிறுவனம் நிலைநிறுத்தி வருகிறது.

