வணிகம்
கொமர்ஷல் வங்கி, இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) 2025 TAGS விருதுகளில் இரட்டை தங்கம் உட்பட ஐந்து விர

Feb 26, 2026 - 05:29 PM -

0

கொமர்ஷல் வங்கி, இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) 2025 TAGS விருதுகளில் இரட்டை தங்கம் உட்பட ஐந்து விர

கொமர்ஷல் வங்கியானது நிறுவன அறிக்கையிடலில் உயர்ந்த தரநிலைகளையும் சிறந்த நிர்வாக நடைமுறைகளையும் பேணும் வங்கியின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்வகையில் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் (CA Sri Lanka) நடத்திய 2025 TAGS விருதுகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட ஐந்து முக்கிய விருதுகளை வென்றுள்ளது. இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு,நிர்வாகம், மற்றும் நிலைபெறுதன்மை ஆகிய துறைகளில் வங்கியின் வலுவான திறனை வெளிப்படுத்துகிறது. 

கொழும்பு, ஷங்கிரி லா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதுகள், சவாலான நிலையிலிருந்து அமைதியை நோக்கிய சூழலில் என்ற தலைப்பிலான வங்கியின் 2024 ஆம் ஆண்டு அறிக்கைக்கு வழங்கப்பட்டவையாகும். வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்தின் பல பரிமாணங்களில் தகவல் வெளிப்படுத்தலில் சிறப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

கொமர்ஷல் வங்கியானது பெருநிறுவன அறிக்கையிடலில் சிறப்புக்கான (Excellence in Corporate Reporting) வெள்ளி விருதைப் பெற்றது இது அதன் நிதி அறிக்கையிடலின் வலிமையையும் முழுமையையும் வலியுறுத்துகிறது. மேலும், வங்கி துறைப் பிரிவில் வெற்றியாளராக தங்க விருதையும், சிறப்பு விருதுகள் பிரிவின் கீழ் நிதிச் சேவைகள் துறையில் நிறுவன ஆளுமைக்கான இரண்டாவது தங்க விருதையும் கைப்பற்றியது. 

தனது ஒருங்கிணைந்த தகவல் வெளிப்படுத்தல்களின் வலிமை மற்றும் தெளிவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சிறப்பு விருதுகள் பிரிவில் ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கான வெள்ளி விருதையும், டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்த அறிக்கையிடலுக்கு வெண்கல விருதையும் வங்கி பெற்றுள்ளது. 

இந்த விருதுகள் எமது வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இவை தற்காலிகமானவை அல்ல அது எமது வர்த்தக நடவடிக்கைகளின் மையத்தில் பதிந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன, என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க தெரிவித்தார். 

2024 ஆண்டு அறிக்கையானது, இலங்கை பொருளாதார மந்த நிலையிலிருந்து நிலைபெறுதகு தன்மையை நோக்கி மாறிக்கொண்டுவரும் காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டது. அந்த சூழலில் தெளிவான, நேர்மையான மற்றும் முழுமையான அறிக்கையிடல் இன்னும் முக்கியமானதாகிறது.எமது நோக்கம் எமது நிதி செயல்திறனை மட்டுமன்றி, நிலையான மதிப்பு உருவாக்கத்தை ஆதரிக்கும் ஒழுக்கம், மனவலிமை மற்றும் மூலோபாயத் தெளிவையும் வெளிப்படுத்துவதாகும். CA Sri Lanka வழங்கிய இந்த அங்கீகாரமானது,எமது குழுவின் தொழில்முறை திறமைக்கும் வங்கியின் அறிக்கையிடல் கட்டமைப்பின் வலிமைக்கும் அளிக்கப்படும் கௌரவமாகும், என அவர் மேலும் கூறினார். 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05