செய்திகள்
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

Feb 26, 2026 - 06:16 PM -

0

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான 'சூப்பர் 8' சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமானது. 

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இந்நிலையில் 177 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றது. 

​ தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அணித் தலைவர் எய்டன் மர்க்ரம் 82 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 47 ஓட்டங்களையும், ரியான் ரிக்கல்டன் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

​குறித்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05