Header Logo
Mogo Academy

விளையாட்டு
இந்திய வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

Feb 27, 2026 - 10:28 AM -

0

இந்திய வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்
Mobitel inner

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் காலமானார். 

நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள வைத்தியசாலையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

இந்த துயரச் செய்தியை இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உறுதிப்படுத்தினார். 

இந்த இழப்பு ரிங்கு சிங்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய துயரமாகும். 

கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் வெற்றிப் பயணத்தின் பின்னணியில் அவரது தந்தையின் தியாகம் மிகப் பெரிய காரணமாக இருந்தது. 

அலிகரில் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகத்தராக பணியாளராக பணியாற்றிய அவர், குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாலும், மகன் கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் என்ற கனவை ஒருபோதும் கைவிடவில்லை என பாடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara