Header Logo

சினிமா
ஏ.ஆர். ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகை!

Feb 27, 2026 - 12:11 PM -

0

ஏ.ஆர். ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகை!

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் அடுத்ததாக பெத்தி, மூன் வாக், ராமாயணா பார்ட் 1 மற்றும் பார்ட் 2, கில்லர் என பல படங்கள் வெளிவரவுள்ளது. இதில் ராமாயணா திரைப்படத்தில் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் Hans Zimmer உடன் இணைந்து ரஹ்மான் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரை பிரபலங்கள் அவ்வப்போது அளிக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகை மோகினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஏ.ஆர். ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறியுள்ளார். 

இதில், "நான் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகை, வெறித்தனமான அன்பு இருந்தது என்றே சொல்லலாம். அவர் இஸ்லாமிற்கு மாறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். திலீப் என்ற பெயரே போதுமானதாக இருந்தது, மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் இவரை எனக்கு பிடித்திருக்கிறது, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சொல்வதற்கு வசதியாக இருந்திருக்கும்" என கூறியுள்ளார். 

ஏ.ஆர். ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக நடிகை மோகினி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தமிழில் வெளிவந்த கூட்டு புழுக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஈரமான ரோஜாவே, நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின் 2011 ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title