Header Logo

சினிமா
யாஷ், பிரபாஸ் பாணியில் களமிறங்கும் சர்வானந்த்

Feb 27, 2026 - 01:03 PM -

0

யாஷ், பிரபாஸ் பாணியில் களமிறங்கும் சர்வானந்த்

தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷர்வானந்த். 

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். சாக்லெட் ஹீரோவாக நடித்து வந்த ஷர்வானந்த் சமீபகாலமாக ஆக்ஷன் படங்களிலும் நடித்து வருகிறார். 

இதன் அடுத்த கட்டமாக யாஷ், பிரபாஸ் பாணியில் 'போகி' என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். 

இந்த படத்தை சம்பத் நந்தி இயக்குகிறார். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் சார்பில் கே.கே.ராதா மோகன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். வருகிற ஆகஸ்ட் 28ம் திகதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “1960களின் பிற்பகுதியில் வடக்கு தெலுங்கானா , மகாராஷ்டிரா எல்லையில் அமைக்கப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க காலகட்ட பின்னணியில் படம் உருவாகி வருகிறது. 

தற்போது ஐதராபாத்தில் மிகப்பெரிய அரங்கில் அதிரடி ஆக் ஷன் காட்சிகள் படமாகி வருகிறது. இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இரண்டு பெரிய அளவிலான அதிரடி அத்தியாயங்களை படமாக்குகிறார். 

இந்த திரைப்படத்தில் வலிமைமிக்க தொழில்நுட்ப குழுவினர் ஒன்றிணைந்துள்ளனர். பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். 

ஆகஸ்ட் 28ம் திகதி ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title