Header Logo

சினிமா
ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்!

Feb 27, 2026 - 01:46 PM -

0

ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்!

ஜெயிலர் 2, தலைவர் 173, தலைவர் 174 என மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 மற்றும் தனது 174 ஆவது படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் தலைவர் 174 படத்தின் புரோமோ வீடியோ செம மாஸாக வெளிவந்தது. இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து கமல் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள். இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 173 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மகனாக மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title