Header Logo

சினிமா
ரஜினி - கமல் படத்தில் 'மெகா வில்லன்'!

Feb 27, 2026 - 03:58 PM -

0

ரஜினி - கமல் படத்தில் 'மெகா வில்லன்'!

45 ஆண்டுகள் கழித்து கோலிவுட் சூப்பர் ஸ்டார்களான ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு கடந்த 21 ஆம் திகதி வெளியிட்டது. இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். 

டார்க் காமெடி படங்களுக்கு பெயர் போன நெல்சன் ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான தடத்தை அழுத்தமாக பதித்தார். 

விமர்சனங்களை சந்தித்து கம்பேக் கொடுத்த நெல்சன் மீண்டும் ரஜினியை வைத்து ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார். 

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். 

இதற்கு அடுத்த படத்தில்தான் ரஜினியும், கமலும் இணைகின்றனர். ரஜினியும் - கமலும் இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காம்போ நடிக்கும் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டாக ரஜினி - கமலுக்கு வில்லனாக அவர்களுக்கு இணையான மற்றொரு சூப்பர் ஸ்டார் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தான் அந்த நடிகர். உடல்நல குறைவில் இருந்து மீண்டு வந்த மம்மூட்டி மீண்டும் சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே மோகன்லால் உடன் இணைந்து 'பேட்ரியாட்', தனுஷ் படம் என அடுத்தடுத்து கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் நடிக்கவுள்ள படத்தில் அவர்களுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ரஜினி - கமல் காம்போவில் மூன்றாவது சூப்பர் ஸ்டாராக மம்மூட்டி இணையவுள்ளார் என்கிற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. ஏற்கனவே வெளியான புரோமோ வீடியோவின் இறுதியில் கமல்ஹாசன், ‘யார் ஹீரோ’ என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் சொல்லாமலேயே வீடியோ முடிவடைகிறது. 

ரஜினி, கமல் இருவரில் யார் ஹீரோ... யார் வில்லன் என்கிற விவாதங்களுக்கு மத்தியில் இப்போது மம்மூட்டி வில்லன் என்று வெளியாகியிருக்கும் தகவல் ஹைப்பை ஏற்றியுள்ளது. 'பிரம்மயுகம்', 'களம்காவல்' என சமீபமாக அடுத்தடுத்து இரு படங்களில் மம்மூட்டி காட்டியிருந்த வில்லத்தனம் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்ட நிலையில் இப்போது ரஜினி - கமல் படத்திலும் வில்லத்தனம் காண்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி ஆரம்ப கட்டங்களில் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்தார். ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் குறைவான தமிழ் படங்களிலேயே நடித்து வந்தார். கடைசியாக ராம் இயக்கத்தில் பேரன்பு என்கிற படத்தில் நடித்த நிலையில் தான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் அதுவும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title