Feb 27, 2026 - 08:35 PM -
0
2026 டி-20 உலக்க கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Glenn Phillips அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், Tim Seifert 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Adil Rashid, Will Jacks, Rehan Ahmed ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இங்கிலாந்து அணிக்கு160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

