Feb 27, 2026 - 10:32 PM -
0
2026 டி-20 உலக்க கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Glenn Phillips அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், Tim Seifert 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Adil Rashid, Will Jacks, Rehan Ahmed ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Tom Banton அதிகபட்சமாக 33 ஓட்டங்களையும், Will Jacks ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Rachin Ravindra 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

